தமிழக செய்திகள்

ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை அபேஸ்

ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை அபேஸ் செய்யப்பட்டது.

நாகர்கோவில்:

ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை அபேஸ் செய்யப்பட்டது.

நாகர்கோவில் வடசேரி வெள்ளாளர் கீழத்தெருவை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 71). இவர் சம்பவத்தன்று ஈசாந்திமங்கலத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் பங்கேற்று விட்டு பஸ்சில் வீடு திரும்பினார். மீனாட்சி வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை யாரோ மர்மநபர் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து மீனாட்சி வடசோ போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

இதேபோல சம்பவத்தன்று ஓடும் பஸ்சில் வடசேரி மேலபுத்தேரியை சேர்ந்த கஸ்தூரி (75) என்பவரிடமும் மாமநபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருடைய கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை அபேஸ்செய்து சென்றுள்ளனர். இதுகுறித்தும் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்