திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கும்பகோணம் சாலையில் கொல்லுமாங்குடி ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் 4-ந்தேதி (சனிக்கிழமை), 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இதனால் இந்த சாலை அடைக்கப்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள் மாற்று பாதையின் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவலை ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.