தமிழக செய்திகள்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவு மத்திய மந்திரிகள்- தலைவர்கள் இரங்கல்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்கு ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #KanchiSeer

சென்னை

காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (வயது 82) இன்று காலமானார். அவரது மறைவிற்கு மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி ,சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை பாரதம் இழந்திருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஜெயேந்திரர் மறைவு குறித்து செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

காஞ்சி பெரியவர் ஜெயேந்திரர் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி; ஈடு செய்ய முடியாத இழப்பு என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்து உள்ளார்.

ஜெயேந்திரர் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.

சீர்திருத்தவாதியான ஜெயேந்திரர் நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர் என பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம் மாதவ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

#Kanchisankaracharyar #Jayendrar #JayendraSaraswathi #Kanchipuram

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு