தமிழக செய்திகள்

சேலத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 5 நாட்களுக்குப்பின் மீட்பு

புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.

தினத்தந்தி

சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் மதுரை (வயது 22). இவர் தனது மனைவி மற்றும் 9 மாத பெண் குழந்தையுடன் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்திற்கு அடியில் தங்கியிருந்து கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார்.

இதனிடையே, கடந்த 5ம் தேதி நள்ளிரவு மேம்பாலம் அடியில் மதுரை தனது மனைவி, குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் மதுரையின் குழந்தையை கடத்திச்சென்றுள்ளார். அதிகாலை விழித்து பார்த்தபோது குழந்தை கடத்தப்பட்டதை அறிந்த மதுரை உடனடியாக அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், 5 நாட்களுக்குமுன் கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீசார் இன்று மீட்டுள்ளனர். தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்ற ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு