தமிழக செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

கோவை,

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சயான், மனோஜிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து சந்தோஷ் சாமி இன்று காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி  முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் கொடநாடு எஸ்டேட்டில் சம்பவத்தன்று என்ன நடந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. யாரெல்லாம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது? யார் சொல்லி அங்கு சென்றனர்? என பல கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை