தமிழக செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஊட்டி கோர்ட்டில் இன்று விசாரணை

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஊட்டி கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை போலீசார் மறு விசாரணை நடந்தினர். பல்வேறு கோணங்களில் பலரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.இவ்வழக்கின் விசாரணைக்கு சயான் உள்ளிட்ட 10 பேரும் ஆஜராக உள்ளனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்