தமிழக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை: உசிலம்பட்டி பகுதியில் ஒரே நாளில் 23 செ.மீ. மழை பதிவு

உசிலம்பட்டி பகுதியில் ஒரே நாளில் 23 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. அதிலும் உசிலம்பட்டி, எழுமலை, சேடப்பட்டி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை கொட்டுகிறது. உசிலம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் 11.1 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவில் 3 மணி நேரம் இடைவிடாமல் கனமழை கொட்டியது. எனவே நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 23.3 செ.மீட்டர் மழை, உசிலம்பட்டி பகுதியில் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

தொடர் மழை காரணமாக உசிலம்பட்டி பகுதியில் 20 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 4 இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. பல சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து நீண்டநேரம் பாதிக்கப்பட்டது. கனமழையினால் உசிலம்பட்டி, எழுமலை, சேடப்பட்டி ஆகிய பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்