தமிழக செய்திகள்

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.

புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று ஆவணி மாத கிருத்திகை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிங்கார வேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் ஆறுமுக கடவுள், மேலக்குமரர், கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி, தோப்புத்துறை கைலாசநாதர் கோவில் முருகன், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவில் முருகன், நாட்டுமடம் மாரியம்மன் கோவில் சுப்பிரமணியர் சன்னதிகளிலும் கிருத்திகை வழிபாடு நடந்தது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு