தமிழக செய்திகள்

பெரியநாயகி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

பெரியநாயகி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

கந்தர்வகோட்டை அருகே மங்களா கோவிலில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் போதிய மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடும்பங்களில் மங்களம் பெருகவும், நாட்டில் அமைதி நிலவிடவும் வேண்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையாட்டி 500 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

ஆலங்குடி பாரதிதாசன் சாலையில் உள்ள வீரமாமுனீஸ்வரர் கோவில் மண்டலாபிஷேகத்தையாட்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டையில் வனதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கீரனூர் அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்