தமிழக செய்திகள்

கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குமரன் (வயது 41). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா.

இந்தநிலையில் குமரன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் குமரன் திடீரென வீட்டில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு