தமிழக செய்திகள்

மறைந்த எம்.பி. கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

மறைந்த எம்.பி. கணேசமூர்த்தியின் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

ஈரோடு,

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, கடந்த 24ம் தேதி தற்கொலைக்கு முயன்றதையடுத்து, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் அவரின் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக ஈரோடு வந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த எம்.பி. கணேசமூர்த்தியின் இல்லத்திற்கு சென்று, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், கணேசமூர்த்தியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்