தமிழக செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் இலுப்பையூரணியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). சவரத் தொழிலாளி. இவருடைய மனைவி பாண்டியம்மாள் (31). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கணபதி (55).

பாண்டியம்மாளுக்கும், கணபதியின் மனைவி கருப்பாயிக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 3.4.2014 அன்று ராஜேந்திரனை கணபதி, அவருடைய மனைவி கருப்பாயி, மகன்கள் ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகியோர் கத்தியால் குத்தியும், வெட்டியும் கொலை செய்தனர். அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கினை நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இதில் கணபதி, அவரது மனைவி கருப்பாயி, அவர்களுடைய மகன்கள் ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்