சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 48 வயதுள்ள நபர் மற்றும் 2 பெண்களை கடந்த 2021-ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி 48 வயது நபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.85 ஆயிரம் அபராதமும், 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், மற்றொரு பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.