தமிழக செய்திகள்

ஆலங்குளத்தில் சாரல் மழை

ஆலங்குளத்தில் பெய்த சாரல் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆலங்குளம், 

ஆலங்குளத்தில் பெய்த சாரல் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடும் வெயில்

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். முக்கிய சாலைகளில் கூட மதிய நேரத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.

இந்த வெயில் தாக்கம் காரணமாக மக்கள் குளிர்பான கடைகளை நாடி சென்று வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது.

திடீர் மழை

இதையடுத்து மாலை 4 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு திடீரன சாரல் மழை பெய்தது. இந்த மழையானது 6 மணி வரை நீடித்தது.

ஆலங்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்தி பட்டி, அண்ணா நகர், பாரதிநகர், கலைஞர் நகர், வசந்த் நகர், இருளப்ப நகர், எம்.ஜி.ஆர். நகர், தேவர் நகர், ஜெ.ஜெ.நகர். பெரியார் நகர், நேதாஜி நகர், அம்பேத்கர் நகர், சிமெண்ட் ஆலை காலனி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு