கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு, நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பெருவிழா, கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் 6-ம் நாள் திருவிழாவான இன்று (புதன்கிழமை) காலை தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நாளை(வியாழக்கிழமை) சிகர திருவிழாவான தேரோட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அண்ணாத்துரை அறிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு