தமிழக செய்திகள்

மதுரையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை

மதுரையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், மாவூத்துப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் சந்திரபாண்டியன். அதிமுகவைச் சேர்ந்த இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 4-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், சந்திரபாண்டியன் லிங்கவாடி பகுதியிலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக மதுரையை அடுத்த பாலமேடு அருகே தனது டூவிலரில் சென்றுகெண்டிருந்தார். அப்போது வழிமறித்த மர்மகும்பல் அவரை அரிவாளால் சராமரியாக வெட்டிப் விட்டு அங்கிருந்து தப்பியோடியது. படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த பாலமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் பழிக்குப் பழியாக இந்த கெலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தப்பியோடிய மர்மகும்பலை பாலமேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு