தமிழக செய்திகள்

மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் பணியிடை நீக்கம்..!

மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை,

மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாசை பணியிடை நீக்கம் செய்து பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். நேற்றுடன் கிறிஸ்துதாஸ் ஓய்வு பெற இருந்த நிலையில் நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடையும் வரை ஓய்வு பெற அனுமதி இல்லை என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை துணை பதிவாளராக இருக்கக்கூடிய கணேஷ் ஜெட்லி, பால்வளத்துறை துணை ஆணையராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துதாஸ் மீது அவரது உறவினர்கள் 8 பேரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆவின் நிறுவனத்தில் பணி வழங்கியது, ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஆவின் நிர்வாகம் அவர் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு அது குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு