தமிழக செய்திகள்

மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் 15-ந் தேதி வரை ரத்து

மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் 15-ந் தேதி வரை ரத்து

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராஜபாளையம்- சங்கரன்கோவில் ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. எனவே அந்த வழியே ரெயில் இயக்குவதில் குளறுபடி நீடித்து வருகிறது.

இந்தநிலையில், வருகிற 15-ந் தேதி வரை மதுரையில் இருந்து பகல் 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (வ.எண்.06663), செங்கோட்டையில் இருந்து மதியம் 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை (வ.எண்.06664) எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, விருதுநகர் ரெயில் நிலையத்தில் வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால், பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16731) மற்றும் திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16732) ஆகியன வருகிற 14-ந் தேதி திண்டுக்கல்-திருச்செந்தூர் இடையேயும், வருகிற 15-ந் தேதி மதுரை - திருச்செந்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதில் வருகிற 15-ந் தேதி திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு பாலக்காடு புறப்பட்டு செல்லும்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு