தமிழக செய்திகள்

மதுரை: விளாங்குடி பகுதியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு.!

இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் வீட்டு கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் பெண் தொழிலாளி உட்பட 4 பேர் சிக்கிக்கொண்டனர். இதில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் கானப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு