தமிழக செய்திகள்

முழு கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி...

மதுராந்தகம் ஏரி தனது முழு முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். உத்திரமேரூர், வந்தவாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள நீர் வரத்து மூலம் மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.

தற்போது ஏரிக்கு வரும் 500 கன அடி தண்ணீர் கலங்கள் வழியாக உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. அதிகபட்சமாக நீர்வரத்து இருந்தால் மட்டுமே மதகுகள் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது எடுத்து ஏரியை ஒட்டியுள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தாழ்வான பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்