தமிழக செய்திகள்

வில்வநாதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

வில்வநாதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

தினத்தந்தி

திருவலம்

வில்வநாதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

காட்பாடி தாலுகா திருவலத்தில் உள்ள வில்வநாதீஸ்வரர் உடனுறை அனுமத்யம்பாள் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 6 கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி சந்தன காப்பு அலங்காரத்தில் வில்வநாதீஸ்வரர் சமேத தனுமத்யம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையொட்டி மாலை 6 மணியளவில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், திருவாசகம் பாராயணம் மற்றும் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதேபோல் கீரைசாத்து கிராமத்தில் பழமை வாய்ந்த ஏலவார்குழலி உடனுறை வரபுரீஸ்வரர் சிவன் கோவிலும் மகாசிவராத்திரி தினத்தையொட்டி 6 கால பூஜைகள் நடைபெற்றது.

இதில் 10 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது