தமிழக செய்திகள்

பறக்கும் விமானத்தில் புகை பிடித்த மலேசிய பயணி - விமான நிலைய அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர்

பறக்கும் விமானத்தில் புகை பிடித்த மலேசிய பயணியை விமான நிலைய அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, மனைவியுடன் பயணம் செய்த மலேசியா நாட்டைச் சேர்ந்த கோபாலன் அழகன் (வயது 52) என்பவர் திடீரென மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து விமானத்துக்குள்ளேயே புகைபிடிக்க தொடங்கி உள்ளார். இதற்கு சக பயணிகள் கடுமையாக எதிப்பு தெரிவித்தனா. விமான பணிப்பெண்களும் கோபாலன் அழகனிடம் வந்து விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி விமானத்திற்குள் புகை பிடிப்பது குற்றம். புகை பிடிப்பதை நிறுத்துமாறு கூறி அறிவுறுத்தினர்.

இதுகுறித்து விமான பணிப்பெண்கள், விமானியிடம் புகா தெரிவித்ததையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் சென்னையில் தரையிறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், கோபாலன் அழகனை விமானத்தில் இருந்து இறக்கி சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலன் அழகனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்