தமிழக செய்திகள்

ஆண் பிணம்

ஆத்தூரில் ஆண் பிணம் கிடந்தது.

ஆறுமுகநேரி:

ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தென்புறம் தெற்காத்தூர் முடிவில் ரோட்டிற்கு மேல்புறம் புதிதாக கட்டப்படும் கட்டிடம் உள்ளது. இதற்கு பின்னால் அடையாளம் தெரியாத நபர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக மேலாத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ஜெய்லாணி பீவி, ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவருக்கு 45 வயது முதல் 50 வயது வரை இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அவர் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்