தமிழக செய்திகள்

சாதி, மத வேறுபாடின்றி மாமதுரை விழாவை கொண்டாட வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை' என மாமதுரை விழா துவக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

தினத்தந்தி

மதுரை, 

மதுரையில் 4 நாட்கள் மாமதுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: மன்னரையே கண்ணகி கேள்வி கேட்ட இடம் மதுரை. தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் தான் மதுரை. சென்னைக்கு அடுத்து 2வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது மதுரை. மாபெரும் பன்னாட்டு விழாவாக சித்திரை திருவிழா நடக்கிறது.

பழமை மாறாமல் ஊரை பாதுகாப்பது அவசியம். அதே நேரத்தில் நவீன வசதிகளை தர வேண்டும். பண்பாட்டு விழாவை அனைவரும் கொண்டாட வேண்டும். காலம் தோறும் மதுரை மாநகரம் மாறிய காட்சிகள், மதுரை தமுக்கம் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மாமதுரை விழாவை கொண்டாட வேண்டும். பழமைக்கு பழமையாய், புதுமைக்கு புதுமையாய் இளைஞர்கள் ஊரை போற்றி பாதுகாக்க வேண்டும்" இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை