நீலகிரி,
குன்னூர் அருகே வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்க முயன்ற வட மாநிலத்தவரை, பொதுமக்கள் தாக்கி கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே, காட்டேரி பகுதியில் பீகாரை சேர்ந்த அசோக்புல்லா என்பவர், வீடுகளுக்குள் புகுந்து பெண்களை தாக்க முயன்றுள்ளார். அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மீது கற்களை எரிந்து தாக்கியுள்ளார்.
இதனால் அப்பகுதி மக்கள் அசோக்புல்லாவை தாக்கி கட்டி வைத்துள்ளனர். இதன்பின்னர் அசோக்புல்லாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.