தமிழக செய்திகள்

காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

நெல்லை அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை பகுதியில் காரில் 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்த மைக்கேல் (வயது 23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அரிசியுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பணிகரிசல்குளம் காமராஜ்நகரை சேர்ந்த மாரியப்பனை தேடி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது