தமிழக செய்திகள்

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டி: காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்

கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 10 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் நெடுமறம் கிராமத்தில் உள்ள மலையரசியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 5 கிராமத்தினர் இணைந்து நடத்திய இந்த மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் கண்டு களித்த இந்த மஞ்சுவிரட்டு போட்டியில், காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்