சென்னை,
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அதிப்படையிலும், செய்முறைத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என்று குறிப்பிட்டு மதிப்பெண் பட்டியல் வழங்க தேர்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.