தமிழக செய்திகள்

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை நாளை மறுநாள் முதல் பெறலாம் - அரசு தேர்வுகள் இயக்கம்

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை நாளை மறுநாள் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

பிளஸ்-2 துணை தேர்வு எழுதியவர்கள் தங்களது தேர்வு முடிவை, மதிப்பெண் பட்டியலாக www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து வருகிற நாளை மறுநாள் பிற்பகல் 2 மணி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

பிளஸ்-2 துணை தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வருகிற 24, 25-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் (ஒவ்வொரு பாடத்துக்கும்) ரூ.275 ஆகும். மறுகூட்டல் பொறுத்தவரையில் உயிரியல் பாடத்துக்கு ரூ.305 எனவும், இதர பாடங்களுக்கு (ஒவ்வொன்றுக்கும்) ரூ.205 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு