தமிழக செய்திகள்

திருவாரூரில் மகப்பேறு-குழந்தைகள் நல சிகிச்சை மையம் - மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.10½ கோடியில் மகப்பேறு- குழந்தைகள் நல சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

திருவாரூர்,

முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக திருவாரூருக்கு நேற்று வந்தார். அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவாரூர் வந்த மு.க.ஸ்டாலின், காட்டூரில் உள்ள தனது பாட்டி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து திருவாரூக்கு திரும்பிய மு.க.ஸ்டாலின், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரவு அங்கு தங்கினார்.

இந்நிலையில், இன்று(புதன்கிழமை) காலை 10 மணி அளவில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள்நல சிகிச்சை மைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காரில் நாகை மாவட்டம் திருக்குவளைக்கு புறப்பட்டு செல்கிறார்.

திருக்குவளையில், கருணாநிதி இல்லத்தில் உள்ள முத்துவேலர் நூலகம், அஞ்சுகத்தம்மாள் படிப்பகத்துக்கு சென்று அங்கு உள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சென்று அங்கிருந்து காரில் புதுச்சேரி வழியாக சென்னை செல்கிறார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு