மயிலாடுதுறை,
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. கள்ளச்சாரயம் குடித்து சிலரும் உயிரிழந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் கிராமத்தில் பிரபு, செல்வம், வீராச்சாமி, சரத்குமார் ஆகியோர் ரகசியமாக கள்ளச்சாராயம் வாங்கி அருந்தினர். இதில் இரண்டு பேர் கள்ளச்சாராயம் அருந்தியவுடன் கண் தெரியாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், சிகிச்சை பலனின்றி பிரபு, செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் வீராச்சாமி, சரத்குமார் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேந்தங்குடியில் கள்ளச்சாராயம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.