தமிழக செய்திகள்

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில்சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாயப்பட்டறை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்த பின்னர் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இதில் நகராட்சி (பொறுப்பு) ஆணையாளர் ரேணுகா, நகராட்சி துணைத்தலைவர் பாலமுருகன், சாயப்பட்டறை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்