தமிழக செய்திகள்

மேகதாது விவகாரம்; நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது

மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது.

சென்னை,

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது என தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்