தமிழக செய்திகள்

சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸ்; 15 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

சென்னையில் நள்ளிரவில் பைக் ரேசில் ஈடுபட்ட 15 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இருப்பினும், ஏராளமான இளைஞர்கள் நள்ளிரவில் மெரினா கடற்கரை சாலையில் குவிந்து பைக் ரேஸில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் சில இளைஞர்கள் காவல்துறையினரின் சோதனையையும் தாண்டி ஆபத்தான முறையில் பைக் ரேஸ், பைக் வீலிங் செய்வது போன்ற செயலில் ஈடுபட்டதால் நள்ளிரவில் மெரினா கடற்கரை சாலை பரபரப்புடன் காணப்பட்டது.

இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், சென்னையில் நள்ளிரவில் பைக் ரேசில் ஈடுபட்ட 15 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்