தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்: இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ரத்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (20-06-2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21-06-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். எனவே அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்