தமிழக செய்திகள்

அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் குரங்கு அட்டகாசம்

அமைச்சர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தில் குரங்கு ஒன்று அட்டகாசம் செய்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கஜா புயல் நிவாரண பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

அப்போது கூட்டம் நடைபெற்ற அறையில் புகுந்த குரங்கு அங்கும், இங்கும் துள்ளிக்குதித்து ஓடியது. குரங்கு நீண்ட நேரம் ஏ.சி. மீது அமர்ந்திருந்தது. பின்னர் அமைச்சர் மற்றும் ஆட்சியரின் மேஜையில் ஓடி அங்கிருந்து வெளியேறியது . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்