தமிழக செய்திகள்

மத்திய மந்திரியுடன் அமைச்சர் சக்கரபாணி சந்திப்பு உணவு மானிய நிலுவை தொகையை விடுவிக்க கோரிக்கை

மத்திய மந்திரியுடன் அமைச்சர் சக்கரபாணி சந்திப்பு உணவு மானிய நிலுவை தொகையை விடுவிக்க கோரிக்கை.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்ட மந்திரி பியூஸ் கோயலை, தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகத்திற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவை தொகை மற்றும் உணவுத்துறை குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி, தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் வி.ராஜாராமன், தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் அஷிஷ் சாட்டர்ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை