தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமைச்சர் கீதா ஜீவன் வண்ண வானவேடிக்கைகளுடன் தீபாவளி பண்டிகையை முன்னரே கொண்டாடி மகிழ்ந்தார்.

தினத்தந்தி

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லம், அன்புகரங்கள் ஆதரவற்றேர் இல்லத்தில் வசிக்கும் 200 குழந்தைகளுக்கு நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புத்தாடைகள் வழங்கி, தனியார் ஹோட்டலில் அறுசுவை விருந்து அளித்தார். பின்னர் துறைமுக கடற்கரை பகுதியில் வண்ண வானவேடிக்கைகளுடன் தீபாவளி பண்டிகையை முன்னரே கொண்டாடி மகிழ்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில சிறுபான்மை அணி துணைச் செயலாளர் பொன்சீலன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அனுசியா, மற்றும் மணி, அல்பட் மற்றும் காப்பகத்தை சேர்ந்த காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது