பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருவதாக கூறினார். மேலும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்திற்கான நீரை கூடுதலாக பெறுவதற்கு சட்டரீதியான ஒப்பந்தம் நம்மிடம் உள்ளது என்றும் அந்த ஒப்பந்தத்தின் படி கேரள அரசுடன் பேசி கூடுதல் நீரை பெறுவதற்கான நடவடிக்கையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் எடுப்பார் என்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.