தமிழக செய்திகள்

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தெந்தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 26,500 கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் 1,300 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வார இறுதியின் நிலவரப்படி 1,600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 860 பேர் குணமடைந்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது