தமிழக செய்திகள்

சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

தினத்தந்தி

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து ஒரு வாரம் சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கம் மீது விழும். அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழுந்தது. தொடர்ந்து 10 நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் கலந்துகொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சேனாதிபதி குருக்கள், கோவில் கணக்கர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது