தமிழக செய்திகள்

முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் -ஸ்டாலின்

தற்போது முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமே அல்ல என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தற்போது முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமே அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளர். வழிவழியாக தனியாருக்கு பாத்தியப்பட்ட பட்டா மனை என பட்டா நகலுடன் ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.

மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், 'மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! .அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!.

நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!. அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?' என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்