தமிழக செய்திகள்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் காயம்

திருத்தணி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கலாநிதி. இவரது மகன் பார்த்திபன் (வயது 25). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மேல்முருக்கம்பட்டில் இருந்து சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது மேல்முருக்கம்பட்டு விநாயகர் கோவில் எதிரில், திருத்தணி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பூவரசன் (30), அரக்கோணத்தை சேர்ந்த பிரசாத் (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதினார்.

இதில், பார்த்திபன் தலையில் படுகாயம் அடைந்தார். பூவரசன், பிரசாத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்த பார்த்திபன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து ஏற்படுத்தியதாக கூறி பூவரசன், பிரசாந்த் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு