தமிழக செய்திகள்

தமிழக பாரதீய ஜனதா தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் நீடித்திடுவார்; முரளிதர ராவ் தகவல்

தமிழக பாரதீய ஜனதா தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் நீடித்திடுவார் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்து உள்ளார். #MuralitharaRao #TamilisaiSoundararajan

சென்னை,

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவிடம் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

இந்த அறிக்கையின்படி தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் மாற்றப்படுவார் என ஒரு பிரிவு ஊடக தகவலில் கூறப்பட்டு உள்ளது. இந்த தகவலை முரளிதர ராவ் மறுத்துள்ளார். இந்த தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு மாறானது. இது விஷமம் நிறைந்தது என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தர ராஜன் நீடித்திடுவார் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்து உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு