தமிழக செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை

முஸ்லிம்களின் தியாக திருநாளாக போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் நகர ஜூம்மா பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து தொழுகையில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை, ஒருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். முஸ்லிம் சிறுவர்-சிறுமிகளும் ஒருவருக்கொருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பிறகு முஸ்லிம்கள் ஆடு, மாடுகளின் இறைச்சிகளை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானியாக கொடுத்து மகிழ்ந்தனர்.

சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி கீழப்பழூவூர், வெங்கனூர், திருமானூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், விக்கிரமங்கலம், செந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் அவர்கள் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு, ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்