தமிழக செய்திகள்

‘எனது வாழ்க்கையே அதிசயம் தான்’ - நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார்

‘எனது வாழ்க்கையே அதிசயம் தான்’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மும்பை,

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி உலகம் முழுக்க புகழ் பெற்றதாகும். டிஸ்கவரி சேனல் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த பியர் கிரில்சுடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக வெளியாகி இருக்கும் காட்சியில் பியர் கிரில்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கிறார். அதில், ரஜினிகாந்த் அவரது வாழ்க்கை குறித்து கூறியிருப்பதாவது:-

எனது முழு வாழ்க்கையே அதிசயம் தான். இந்த டி.வி. நிகழ்ச்சியை கூட அதற்கு உதாரணமாக சொல்லலாம். டிஸ்கவரி சேனலுக்காக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன் என கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுதவிர சினிமா சண்டை காட்சிகள், சொந்த வாழ்க்கை, நீர்வளத்திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி பியர் கிரில்ஸ் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதில் அளித்து உள்ளார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்