சென்னை,
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அத்துடன், உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை நிறுத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி அதனை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.