தமிழக செய்திகள்

நாராயண சுவாமி கோவில் ஆவணி திருவிழா

விக்கிரமசிங்கபுரம் அருகே நாராயண சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நடந்தது.

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் நாராயண சுவாமி கோவில் ஆவணி தர்ம திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், உகப்படிப்பு பணிவிடை நடைபெற்றது. 10-ம் திருநாளன்று பாபநாசத்தில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், சந்தனக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சிவந்திபுரத்திற்கு வந்தனர். அய்யா குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார். சந்தனக்குடம் கோவிலை அடைந்ததும் உச்சிப்படிப்பு பணிவிடை நடைபெற்றது. மாலையில் உகப்படிப்பு பணிவிடை, அன்னதானம் நடைபெற்றது. இரவில் நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்