தமிழக செய்திகள்

தேசிய பத்திரிகை தினம்: அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் குடியசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் குடியசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம்கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய பத்திரிகை தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் குடியசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த்து குடியசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து செய்தியில்,

தேசிய பத்திரிகை தினமான இன்று அனைத்து ஊடக ஊடக ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கு தகவல் அளிப்பதிலும், அதிகாரம் அளிப்பதிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொற்றுநோய்களின் போது மக்களை தொடர்ந்து தகவல் கொடுத்ததற்காக ஊடக ஊழியர்களை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்