தமிழக செய்திகள்

அறச்சலூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

அறச்சலூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனா.

அறச்சலூர்

பழனியில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். பஸ்சை தினேஷ்குமார் என்பவர் ஓட்டினார். காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் தினேஷ்குமார் நிறுத்த முயன்று உள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்